எழுவாள் அதிகாலையில் சுடர் எழுதிடு கதிரொடு – அவள் எழுதிட மலர்ந்திடும் – நிதம் எமையாளும் கலைக்கோலம் – நதி எனவேயதில் குழலும் அலைபாயும் !
தொழுவாளவள் மலர்வாள் துணையெனவே சகியாய் – அவள் வழுவா குணமுடையாள் – ஒரு வானொளிர் தாரகையாய்த் – தனிச் சுயமாயொரு திடமாய் !. சுகமாய்ச் சுந்தரமாய் !
பதமாய் விருந்தளிப்பாள் பரிவுடன்தான் என்றும் – அவள் பாராமுகத் தவர்க்கே நின்றும் – அவள் நிதமேயொரு குறையெனினும் – அதை நினையாள் மனத்தாலென்றும்!
இதமேதரும் செயல்யாவும் இனித்திடுமே இங்கு – ஒரு இசையாய் ஒலித்திடும் பங்கு – தரும் இயற்கையின் பரிசாய்த் தங்கு – என் இடர்பல களைந்து.!
முனைவர்.கிருட்டிணதிலகா.போரூர்.சென்னை.
