நம் மனத்தை அறவழியில் செலுத்த அடித்தளமிடும் அறத்துப்பாலின் சிந்தனைத் துளிகளில் சில, வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் நூலிலிருந்து…
111 பிறர் செய்யும் துன்பம் அவர் முன்பு செய்த நன்மையை நினைத்தால் மறந்து போகும். 112 எந்நன்றி கொன்றாலும் செய்ந்நன்றி கொல்லாதே. 113 நடுவுநிலைமையை அனைவரிடமும் காட்டுக. 114 நடுவுநிலையாளர் செல்வமே வழிமுறையினருக்கும் பாதுகாப்பு. 115 நடுவுநிலையின்றி வருவது ஆக்கமாயினும் அன்றே ஒழி. 116 விட்டுச் செல்லும் பெயரே தக்கவரைக் காட்டும். 117 நடுவுநிலை தவறாத நெஞ்சமே சான்றோர்க்கு அணி. 118 நடுவுநிலை தவறின் கேடு உறுதி. 119 நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாது உலகு. 120 சொல்தவறாமை மனம் கோணாமையுடன் இணையவேண்டும்.









