திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் என்னும் நூலிலிருந்து சில தேன் துளிகள் நம் சிந்தனைக்காக… சிந்தனையைத் தூண்டும் இந்தச் சிறந்த மேற்கோள்களைப் பார்த்து, படித்து, உணர்ந்து, பகிர்ந்து பயன் பெறுங்கள்.
1. எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் நம் நாடே. 2. அனைவரும் நம் உறவினர். 3. தீமைக்கும் நன்மைக்கும் நாமே காரணம். 4. பெரியோர் என யாரையும் வியந்து போற்றாதீர். 5. சிறியோர் என யாரையும் இகழாதீர். 6. தன்னலமாய் வாழாதீர். 7. பிறர் நலம் பேணி வாழ்வீர். 8. துன்பம் கண்டு துவளாதவரே வெற்றி காண்பார். 9. உள்ளம் உயர்வானால் வாழ்வும் உயரும். 10. வெற்றி கண்டு மயங்காதீர்.









