நாம் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான ஏராளமான கருத்துகள் சங்க இலக்கிய நூல்களில் இருக்கின்றன. அவற்றில் மிகச்சிலவற்றை மட்டும் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் தமது வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் என்னும் நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். அந்தத் தொகுப்பிலிருந்து, இன்றைய சிந்தனைக்காகச் சில கருத்துகள்.
41. எண்ணம் போல் வாழ்வு. 42. விட்டுக் கொடுத்து வாழ்வீர். 43. ஒரு முறை உதவியதால் மறு முறை உதவ மறுக்காதே. 44. தோல்வியை ஒப்புக் கொள்ளல் உயர்ந்த பண்பு. 45. நன்றே நினை ; நன்றே செய்; நன்றாய் வாழ்க! 46. நன்றியை நினைந்து வாழ்க. 47. நன்றல்லதை மறந்து வாழ்க. 48. ஊன் உண்ணாமல் உயிர்களைப் பேணுக. 49. உண்டி கொடுத்தல் உயிர் கொடுத்தலாகும். 50. உற்றுழி உதவுக.









