கல்வியின் பெருமையையும், நூல் பல கற்றுணர்ந்த சான்றோரின் அருமையையும் அழகாக எடுத்துரைக்கும் இன்றைய பத்து சிந்தனைத் துளிகள் இதோ.. வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் என்னும் நூலில் இருந்து உங்கள் அறிவை விரிவாக்க…
51. உயர்ந்தோர் போற்றுக. 52. நிலத்தைவிடப் பெரிதாக, வானைவிட உயர்வாக அன்பு கொள்க. 53. கற்றவர்க்கு எங்கும் சிறப்பு. 54. கற்றவரை மறந்து செல்வம் உற்றவரைப் போற்றாதே. 55. பண்பாளரை மறந்து பணம் உடையவரைப் போற்றாதே. 56. சான்றோரைச் சேர்ந்தால் சான்றோர் ஆவாய். 57. சிறியோரைச் சேர்ந்தால் சிறியோன் ஆவாய். 58. பெரியார் துணை பெருமை தரும். 59. சிற்றினம் சேர்தல் இழிவு தரும். 60. புலி, யானை வேட்டையில் தோல்வியுற்றால், எலியை வேட்டையாடப் போகாது.
போகாது.