அறத்தைப் பற்றிய சிந்தனைத் துளிகளுடன், இன்றைய பகிர்வு வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் நூலிலிருந்து…
71. சிறப்பும் செல்வமும் தருவது அறனே. 72. அறத்தைவிட வேறு ஆக்கம் இல்லை. 73. அறத்தை மறப்பதைவிட வேறு கேடு இல்லை. 74. இயன்ற வழியில் எல்லாம் அறம் செய்க. 75. மனமாசின்றி இருத்தலே அறமாகும். 76. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்க. 77. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்க. 78. வெகுளியைப் போக்கி அறநெறியில் நிற்க. 79. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்றுக. 80. செய்ய வேண்டியது அறச் செயலே.









