வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 211-220
211 புகழ்ப்பணி புரிந்தவரையே போற்றும் உலகு. 212 புகழோ இகழோ காரணம் நாமே. 213 புகழ் வரும் வகையில் செயல்புரிக. 214 புகழ் பெறா வாழ்க்கை வசையுடைய வாழ்க்கை. 215 புகழில்லாமல் வாழ்ந்தால் நிலப்பயனும் குன்றும். 216 புகழ் நீங்கி வாழ்பவரும் வாழாதவரே. 217 பொருட்செல்வம் கீழோரிடமும் இருக்கும்; அருட்செல்வமே செல்வம். 218 அருளாட்சியே அனைத்து வழிக்கும் துணை. 219 அருளுடையார் துன்பம் அடையார். 220 அருள் ஆள்வோர் அல்லல் அடையார்.