வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 231 – 240

231 துன்பம் பொறுத்தலும் செய்யாமையுமே தவமாகும். 232 ஆக்கமும் அழிவும் தவத்தால் வரும். 233 சுட்டால் சுடரும் பொன்போல் துன்பம் பட்டால் ஒளிர்வர். 234 தன்னலம் அற்றவரை மன்னுயிர் தொழும். 235 உலகம் பழித்ததை ஒழித்தால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலும் வேண்டா. 236 கூடா ஒழுக்கம் கேடாய் முடியும். 237 பிறரால் எள்ளப்பட வேண்டாதவன் கள்ளத்தனத்தில் இருந்து தன் நெஞ்சைக் காக்கவும். 238 திருட எண்ணுவதும் தீது. 239 திருட்டுச் செல்வம், பெருகுவது போல் தோன்றினாலும் …

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 231 – 240 Read More »

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221 – 230

221 அருளின்றி அல்லவை செய்தால் பொருள் நீங்கும். 222 இவ்வுலகிற்குப் பொருளும் புகழ் உலகிற்கு அருளும் தேவை. 223 அருளற்றவர்க்கு ஆக்கம் எப்பொழுதும் இல்லை. 224 மெலியாரைத் துன்புறுத்தும் பொழுது வலியார் முன் தன்னை நினைத்துப் பார்க்கவும். 225 பேணாவிட்டால் பொருள் வளம் பெருகாது. 226 ஊன் உண்போர்க்கு அருளாட்சி இல்லை. 227 உடல்சுவை கண்டால் நல்லாக்கம் வராது. 228 புலால் என்பது பிற உடலின் புண்ணே! அதை உண்பானேன்? 229 ஆயிரம் வேள்வியினும் ஒன்றன் உயிர் …

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221 – 230 Read More »

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 211-220

211 புகழ்ப்பணி புரிந்தவரையே போற்றும் உலகு. 212 புகழோ இகழோ காரணம் நாமே. 213 புகழ் வரும் வகையில் செயல்புரிக. 214 புகழ் பெறா வாழ்க்கை வசையுடைய வாழ்க்கை. 215 புகழில்லாமல் வாழ்ந்தால் நிலப்பயனும் குன்றும். 216 புகழ் நீங்கி வாழ்பவரும் வாழாதவரே. 217 பொருட்செல்வம் கீழோரிடமும் இருக்கும்; அருட்செல்வமே செல்வம். 218 அருளாட்சியே அனைத்து வழிக்கும் துணை. 219 அருளுடையார் துன்பம் அடையார். 220 அருள் ஆள்வோர் அல்லல் அடையார்.

Exit mobile version